தீம்தரிகிட

DSC_4048_reduced

அக்ரிலிக் வண்ணம் கொண்டு வரைந்த ஒவியம்.

நான் பணிபுரியும் நிறுவனத்தில் lay off புயல் சமீபத்தில் வீசியது. இந்தியாவில் எங்களது பிரிவிலிருந்து மட்டும் தோராயமாக 350 பேரை இப்புயல் கொண்டு சென்றதாகச் சொல்கின்றனர். கையில் அகப்பட்ட இலை தளைகளைப் பிடித்துக் கொண்டு தப்பித்தவர்களில் நானும் ஒருவன்.

இப்புயலை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் ஒரு மாதத்துக்கும் மேல் வரையும் மனநிலை வாய்க்கவில்லை. இப்போது எல்லாம் ஓய்ந்து அமைதியாக இருக்கின்றது.

பெங்களூரில் இன்று பெய்த மித மழையின் போது வீட்டின் பின் புறம் பார்த்த மேலுள்ள காட்சியை வரைந்தேன். மழையில் நனைந்தபடி கிட்டத்தட்ட 15 நிமிடங்களாக இறக்கையை அகல விரித்து மரத்தின் உச்சி நுனியை பற்றிக் கொண்டு அசைந்தாடிக் கொண்டிருந்தது கழுகு.

தீபாவளி வரவிருக்கின்றது. இந்த மரக் கூட்டத்திலிருந்து மொத்தமாய் ஒரே நேரத்தில் எழும்பிப் பறக்கும் பறவைகளின் காட்சியை இன்னும் இரண்டு வாரங்களுக்கு அடிக்கடிப் பார்க்க வேண்டி வரும்.