வீடு திரும்பல்

prodigal_son_reduced

colour ink on paper

ஊதாரி மைந்தன் உவமை – பிளவுண்ட யூத சமூகத்தின் ஒருங்கிணைவை வலியுறுத்தி இயேசு கூறிய உவமைக் கதை. அன்பின் உச்ச தருணத்தை அற்புதமாய்க் காட்சிப்படுத்திய வீடு திரும்புதலின் கதை.

கத்தோலிக்கத் திருச்சபையிலும் இத்தகைய வீடு திரும்பல் நிகழ்ந்தது. 1962-ல் கூடிய இரண்டாம் வத்திக்கான் சங்கம் அது. கடந்த காலத் தவறுகளை உணர்ந்து காலத்திற்கு ஏற்றபடி சபையை சீர்திருத்தும் நோக்கம் கொண்டு கூடிய முக்கியமான பொதுச் சங்கம். பிற சமயங்கள் மீது கடந்த காலத்தில் கொண்டிருந்த தவறான கண்ணோட்டத்தைக் களைந்து பிற சமய உண்மைகளுக்கு மதிப்பளிக்கவும், அவர்களின் சமூக-பண்பாட்டு விழுமியங்களை பேணி வளர்க்கவும் கத்தோலிக்கர்களுக்கு ஆணையிடுகின்றது இரண்டாம் வத்திக்கான் சங்கம்.

நாடுகளுக்கேற்றபடி கலாச்சாரக் கூறுகளை திருவழிபாட்டில் உள்வாங்க சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. பல புதிய இறையியல் கோட்பாடுகளுக்கு வித்திட்டது. தமிழில் கொண்டு வரப்பட்ட விவிலிய பொது மொழிபெயர்ப்பு இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பரிந்துரைகளின் மூலம் நிகழ்ந்த மிகப் பெரும் பாய்ச்சல் என்றே கூறலாம். சங்கத்தின் பரிந்துரையின் படி தற்போது விளக்கவுரைகளுடன் விவிலியம் கிடைக்கின்றது. இந்த விளக்கவுரைகள் தர்க்கப்பூர்வமாகவும், வரலாற்று உணர்வுடனும், இலக்கிய நயத்தோடும், தொன்மங்களையும் வரலாற்றையும் பிரித்தரியும் நோக்குடனும் விவிலியத்தை அணுக உதவி செய்கின்றது. ஒரு சிறிய உதாரணத்தை இங்கு பார்க்கலாம். மோசேயின் தலைமையில் செங்கடலைப் பிளந்து மக்கள் தப்பிச் சென்ற நிகழ்வைப் பற்றி விவிலியத்தில் உள்ள கீழ்கண்ட விளக்கவுரை முக்கியமானது:

“எபிரேயர் செங்கடலைக் கடந்த நிகழ்வு இங்குக் குறிப்பிடப்படுகின்றது. அவர்கள் கடந்தது செங்கடல்தானா? என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. காரணம் எபிரேய விவிலியம் பயன்படுத்தும் ‘யாம்சூப்’ என்னும் சொல்லைச் செங்கடல் என்றும் நாணல் கடல் என்றும் மொழிபெயர்க்கலாம். செங்கடலின் வடக்குப் பகுதி நாணல்கள் நிரைந்த சதுப்பு நிலமாக இருந்தது. அப்பகுதி சில வேளைகளில் தண்ணீர் இன்றியும், சில வேளைகளில் தண்ணீராலும் சூழ்ந்து இருந்தது. தங்களைத் துரத்தி வந்த எகிப்தியர்களிடமிருந்து விடுபடுவதற்காக எபிரேயர்கள் இந்தச் சதுப்பு நிலப் பகுதி வழியாகத் தப்பி ஓடியிருப்பர். பின்னால் வந்த எகிப்திய வீரர்களின் தேர்கள் சதுப்பு நிலத்தில் புதையுண்டிருக்கும். இவ்வாறு எபிரேய மக்கள் அன்று காப்பாற்றப்பட்டனர். இதை அவர்கள் கடவுளின் மாபெரும் வல்லச் செயலாகக் கண்டனர். அதற்காக இறைவனைப் போற்றி வந்தனர். நீர்த்திரள் இரு சுவர்கள் போல் நின்று இஸ்ரயேலரைத் தப்ப வைத்ததாகவும், எகிப்தியரை மூடிக்கொண்டதாகவும் கூறப்படுவது குருத்துவ மரபின் பிற்கால மிகைப்படுத்தலாகத் தெரிகிறது.”

இத்தகைய முறையில் விவிலியத்தைப் படிப்பது இறையியல் கல்லூரிகளிலும், ஆராய்ச்சியாளர்களிடமும் எப்போதும் உள்ள வழக்கம்தான் என்றாலும், அன்றாட வாழ்வில் நம்பிக்கையின் பொருட்டு மட்டும் விவிலியத்தைப் படிக்கும் ஒருவருக்கும் இந்த அம்சம் சென்று சேர வேண்டும் என நினைக்கும் சபையின் இந்த attitude change என்பது மிக முக்கியமானது. உண்மை எப்போதும் நம்மிக்கையை உறுதிப்படுத்தும் என்றே சபை கருதுகின்றது.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் முக்கியப் பரிந்துரையான பண்பாட்டுமயமாக்கல் இல்லையேல் காமநாயக்கன்பட்டித் திருவிழாச் சடங்குகளையும், உவரி அந்தோணியாருக்கு கடா வெட்டி அசனம் கொடுக்கும் சடங்கையும் நம்மால் இன்று நினைத்துப்பார்க்க முடியுமா? நம் கலாச்சாரத்தில் கரைந்து கொள்வதற்கு எவ்வகையிலும் சங்கம் தடைசொல்வதில்லை.

கத்தோலிக்கத் திருச்சபயின் இம்மாற்றத்தையே இளைய மகனின் வீடுதிரும்பலோடு நான் ஒப்பிடுகின்றேன். இந்த வீடுதிரும்பல் பயணம் உச்ச அன்பை ருசிக்கும் அந்த இலக்கை இன்னும் அடையவில்லை என்று கூறலாம். பல சீர்கேடுகள் இன்னும் கத்தோலிக்கத்தில் உள்ளது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பரிந்துரைகளே இன்றும் கத்தோலிக்கத்திற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. சபைக்குள் இருக்கும் பழைமைவாதத்தை ஊதாரி மைந்தன் கதையின் கோபம் கொண்ட மூத்த மகனுக்கு ஒப்பிடலாம். இதையும் சரிசெய்ய இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறும் பரிந்துரை திறந்த மனதோடு கொள்ளும் உரையாடலையே. ஊதாரி மைந்தன் உவமையில் தந்தை செய்வதும் அதையே.

இந்த வருடம் டிசம்பர் எட்டாம் நாளோடு, இரண்டாம் வத்திக்கான் சங்கம் நிறைவுற்று 50 ஆண்டுகள் நிறைவடைகின்றது. அன்பின் தருணத்தை ருசிக்க கிறித்தவர்களுக்கு இன்றைய தேவை இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளில் நாம் காணும் முதிர்ச்சியே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s