Thirty-six Views of Mount kalugumalai – 28

kml_series_28_reduced

Acrylic on canvas

பாரதியார் கழுகுமலையில் அவ்வப்போது நாட்களைச் செலவிட்டதாய் அவரது மனைவி செல்லம்மா தான் எழுதிய பாரதியார் சரித்திரத்தில் பதிவு செய்கிறார்.

கழுகுமலைக்குக் கிறித்தவம் வரக் காரணமாக இருந்த பல்லக்கு ஊர்வலப் பிரச்சினையைத் தொடர்ந்து பங்குனி உத்திரத் தேர்த் திருவிழாவின் போது நடந்த கலவரம் குறித்து செல்லம்மா கீழ்கண்டவாறு பதிவு செய்கின்றார்:

“எட்டயபுரம் ஜமீனைச் சேர்ந்த கழுகுமலையில் மானேஜர் வெங்கட்டராயர் குத்துண்ட துயரமான சம்பவம் பாரதியாரை வருத்தத்திற்குள்ளாக்கியது. மறவர்களுக்கும், சாணார்களுக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டு உற்சவத்தின்போது தேரை விடக் கூடாதென்று மறித்தார்கள். வெங்கட்டராயர், பாவம்! அப்போதுதான் சாப்பிட இலையில் உட்கார்ந்தவர், சாப்பிடாமல் கலகம் நடக்கும் இடத்தைப் பார்வையிடச் சென்றார். ‘இவன் யாரடா,பார்ப்பான்,வழக்குத் தீர்க்க வந்தவன்!’ என்று யாரோ கத்தியால் குத்திக் கொன்றுவிட்டனர். இது முதல் ‘ஜாதிச் சண்டைகளும் சமயச் சண்டைகளும் ஒழிய வேண்டும்’ என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார் பாரதியார்” – பாரதியார் சரித்திரம், செல்லம்மா பாரதி, தையல் வெளியீடு. பக்கம்: 27-28