இரண்டாவது ஆதாம்

secondAdam

egg tempera on canvas

இந்த ஓவியத்தை வரையப் பயன்படுத்திய ஊடகம் காரணமாக எனக்கு மிகப் பிடித்த ஓவியமிது. egg tempera என்ற வண்ண முறைதான் அது. ஐரோப்பாவின் மத்திய காலத்திலும், மேற்கத்திய மறுமலர்ச்சி காலத்தின் முற்கட்டத்திலும் ஓவியர்கள் மிகுதியாகப் பயன்படுத்திய வண்ண ஊடகம் இந்த egg tempera.

நான் பயன்படுத்தியது அச்சு அசலான அக்காலத்திய egg tempera முறையல்ல என்றாலும், மிக மிக ஆரம்ப நிலை எனச் சொல்லலாம். பயன்படுத்திய வண்ணத் துகள்களும் செயற்கையானது(synthetic). நெடுநாட்களாகவே இந்த வண்ணத்தை வாங்கிப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் சந்தையில் கிடைக்கும் egg tempera வண்ணங்கள் தங்கத்தின் விலைக்குச் சமானம். நானே தயார் செய்துவிடலாம் என எண்ணினேன். Youtube-ம் கைகொடுத்தது.

இதுதான் தயாரிப்பு முறை:

soft pastel-ன் தேவையான வண்ணங்களை எடுத்து பொடி செய்து, அதனோடு முட்டையின் மஞ்சள் கரு, ஆளி விதை எண்ணெய்(linseed oil), தண்ணீர் ஆகியவற்றை சம அளவில் கலந்து தேவையான திரவப் பதத்தில் செய்து கொள்ள வேண்டும்.

நான் தண்ணீர் சேர்த்துக் கொள்ள மறந்து விட்டேன். அது பெரிய அளவில் பாதிப்பில்லை எனத்தான் நினைக்கிறேன். தண்ணீர் கலக்காததால் வண்ணங்கள் திரண்டு வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. அதுவும் ஒரு வகையான texture-தான் என எடுத்துக் கொண்டேன். இதன் ஆயுள் பற்றி எதுவும் கணிக்க முடியவில்லை. எனவேதான் முதலில் இதை உடனடியாக புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டேன். இது எந்த அளவுக்கு தாக்குப்பிடிக்கின்றது என்பதைப் பொறுத்து செய்முறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

ஓவியம் குறித்து..

ஏசுவை இரண்டாவது ஆதாமாக எண்ணிப் பார்த்த புனித பவுலடியாரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது இந்த ஓவியம். ஒருவரால் வீழ்ந்த உலகம் இன்னொருவரால் மீண்டது என்பதே பவுலின் இரண்டாம் ஆதாம் என்ற உருவகத்திற்குப் பின்னுள்ள விளக்கம்.

விதிகளையும் சடங்குகளையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தவர்களை நோக்கி கிறிஸ்துவில் அத்தனை சட்டங்களும் சடங்குகளும் நிறைவெய்தின, இனி விதிகளைப் பின்னுக்குத் தள்ளி அன்பை முன் வையுங்கள் என ஓயாது சொல்லிக் கொண்டிருந்தவர் பவுல். ஆன்மீகம் என்பது இறுக்கமான சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது என்ற அன்றைய அதே சிந்தனை மீண்டும் இன்று தலை தூக்கி விட்டது. அன்பையும் சரணாகதியையும் முதன்மைப்படுத்திய பவுலின் சிந்தனைகள் கிறித்தவத்திற்கு இன்று மிகத் தேவையானது. ஈஸ்டர் சடங்குகள் வழியாக நாம் உணரும் கிறிஸ்துவும், பவுலின் கவித்துவ உருவகங்களில் தென்படும் கிறிஸ்துவும் ஒரே நபராய் இருக்கும் வரைதான் இந்தச் சடங்குகளுக்கெல்லாம் அர்த்தமிருக்கும். உயிர்ப்புப் பெருநாள் வாழ்த்துகள்.

Advertisements

3 thoughts on “இரண்டாவது ஆதாம்

  1. // ஆன்மீகம் என்பது இறுக்கமான சம்பிரதாயங்களுக்கு உட்பட்டது என்ற அன்றைய அதே சிந்தனை மீண்டும் இன்று தலை தூக்கி விட்டது. அன்பையும் சரணாகதியையும் முதன்மைப்படுத்திய பவுலின் சிந்தனைகள் கிறித்தவத்திற்கு இன்று மிகத் தேவையானது. ஈஸ்டர் சடங்குகள் வழியாக நாம் உணரும் கிறிஸ்துவும், பவுலின் கவித்துவ உருவகங்களில் தென்படும் கிறிஸ்துவும் ஒரே நபராய் இருக்கும் வரைதான் இந்தச் சடங்குகளுக்கெல்லாம் அர்த்தமிருக்கும். // Well Said

  2. பேரன்பு – ..விதானம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s