நானா அது?

DSC_5394 DSC_5393 DSC_5392DSC_5395 DSC_5402DSC_5399 DSC_5397DSC_5401

மேலுள்ள படங்களெல்லாம் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன் வரைந்தவை. கல்லூரிக் காலம்.  முதிர்ச்சியற்ற மனநிலை. அடங்கா ஆர்வக் கோளாறு. உலகையே அறிந்து விட்டதாக அசட்டு மிதப்பு. சமீபத்தில் எனது இந்த பழைய ஸ்கெட்ச் புக் கண்ணில் பட்டது. நுனிப் புல் மேய்ந்த ஒரு காலகட்டத்தை இப்படங்கள் கண்முன் கொண்டு நிறுத்தியது. சாய்பாபாவின் தலை முடியை வரையும் ஆனந்தத்திற்காகவே அவரை அப்போது பிடித்திருந்தது. இப்போதைய படங்களை இன்னும் பல வருடங்கள் கழித்துப் பார்த்தால் இன்றைய அசட்டுத் தனங்களையும் மன ஓட்டத்தையும் தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். மனதுக்கு நிறைவானது என்னவென்றால் ஓவியம் மூலமாக என்னைப் பற்றிய விபரங்களை எனக்காக நானே சேமித்துக் கொள்கிறேன் என்பதுதான்.

விரிசடை உரகாபரணன்

sivam

Ink on paper

மின்னொப் பாகி விளங்கும்வி ரிசடை
என்னப் பாஎனக் கின்அருள் ஈந்துநின்
பொன்னொப் பாந்துணைப் பூம்பதம் போற்றியே
உன்னப் பாங்கின்உ யர்நெறி உய்க்கவே.
-திருவருட்பா

மற்றொரு சிவன் ஓவியம்: புரிந்தவன் ஆட புவனங்கள் ஆடும்

Thirty-six Views of Mount kalugumalai – 17

padalam_two

Water colour and soft pastel on paper

தகரேறு படலம் – 2

 எட்டுள திசைக்கரி இரிந்து அலறி ஏங்கக்
 கிட்டி எதிர் தாக்குமதி கேழ் கிளரும் மானத்
 தட்டி ரவி தேரொடு தகர்ந்து முரிவாக
 முட்டும் அவர் தம் பரியை மொய்பின் ஒடு பாயும்.
 - கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகளின் கந்த புராணம்.

Thirty-six Views of Mount kalugumalai – 16

padalam_One_reduced

Water colour and soft pastel on paper.

தகரேறு படலம் – 1

தீ மிசை எழுந்தது ஒரு செக்கர் புரை செச்சை...
 ...'நங்களினமே பலவும் நாளும் அடுகின்றார் 
 இங்கு இவரை யான் அடுவன்'
 - கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகளின் கந்த புராணம்.