Thirty-six Views of Mount kalugumalai – 12

DSC_5357_2X4

Acrylic on canvas

1934-ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்திற்காய் தமிழ்நாடு முழுதும் கிட்டத்தட்ட ஒருமாத காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் காந்தி. தமிழ் நாட்டில் இப்பிரயாணப் பொறுப்பை நிர்வகித்தவர் தி.சே.சௌ. ராஜன். ‘தமிழ் நாட்டில் காந்தி’ என்ற அவரது நூலில் அவர் குறிப்பிட்டுள்ள கீழ்கண்ட விஷயம் இந்த ஓவியத்தை வரையத் தூண்டியது.

‘அநேகமாய் ஜனங்கள் வழியைக் குறுக்கிட்டு மறிக்காவிட்டால், நாங்கள் வேகமாகவே காரை விட்டுக் கொண்டு போய்விடுவோம். அப்படி அவசரமாய்ப் போகையில் கூட்டத்தில் எவர் எவர்கள் கண்ணுக்கு யார் யார் காந்தியாகத் தோன்றுவார்களோ அவரவர்கள் காந்திதான்’

கழுகுமலை தொடர் ஓவியத்தில் ஒரு பகுதியாய் கழுகுமலையின் பின்னணியில் இவ்வோவியத்தை வரையக் காரணம், தீண்டாமை ஒழிப்பு சுற்றுப் பயணத்தில் கழுகுமலை வழியாக காந்தி சென்றுள்ளார் என்பதனால். தூத்துக்குடியிலிருந்து எட்டயபுரம், கோவில்பட்டி மற்றும் சங்கரன்கோயில் போன்ற ஊர்களை உள்ளடக்கி ராஜபாளையம் நோக்கி பயணித்ததாக ராஜன் பதிவு செய்துள்ளார். எனவே கழுகுமலை வழியே காந்தி கடந்து சென்றிருக்க வேண்டும்.

ஓவியர் கி.முத்து பற்றிய கீழ்கண்ட பதிவின் மூலமும் இதனை அறிந்து கொள்ளலாம்.

‘1935-ல் கழுகுமலை வந்த காந்தியடிகள், சரஸ்வதி வாசகசாலை ஸ்தூபியை நிறுவி, கீழபஜாரின் தென் மூலையில் நின்று சொற்பொழிவாற்றிச் சென்றார். அதற்குப் பின்பே அவ்விடம் ‘காந்தி மைதானம்’ என்று அழைக்கப்படுவதாகக் கூறினார்’