காற்றின் நிறம்

DSC_2117_1

கருப்புப் பாறைகள். அதன் மேல் வெள்ளை அலை நுரை. அந்த நுரையின் ஈரத்தால் கல் மீது படிந்த பச்சைப் பாசி. பாறை மீது கிடைமட்டமாக, இடுக்குகளில் செங்குத்தாக என பல கோணங்களில் காட்சி தரும் செந்தூர நிற நண்டுகள். கண்ணுக்கு முடிந்த மட்டும் தெரியும் சாம்பல்-நீல நிறக் கடல். இந்த முறை புதுச்சேரி சென்ற போது பார்த்த காட்சியினை அக்ரிலிக் கொண்டு வரைந்த ஓவியமிது.

சிறு வயதிலிருந்தே வெளிச்சத்தோடு காற்றைத் தொடர்புபடுத்தி காற்றிற்கு வண்ணங்களை கற்பனை செய்து கொள்வதுண்டு. காலையில் வெள்ளை நிறக் காற்று. மதியம் காற்று வீசினால் அதன் நிறம் மஞ்சள். வெப்பம் தணிந்த மாலை நேரக் காற்று சாம்பல் நிறம். இரவின் குளிர்ந்த காற்று கருப்பு நிறம். இதன் காரணமாகவே நீல வண்ணத்தை விட சாம்பல் மற்றும் கருப்பு வண்ணங்கள் குளிர்ந்த வண்ணங்களாக எனக்குத் தோன்றுவதுண்டு. சொல்லப்போனால், நீலமும் ஒரு வகையில் கருப்புடன் தொடர்புடைய நிறம்தான்.

இந்தக் கடலோரம் நிரம்பிக் கிடக்கும் அடர் கருப்பு நிறப் பாறைகள் அப்படி ஒரு குளிர்ந்த உணர்வையே தந்தது. பெரும்பாலான நேரங்களில் கருப்பு வண்ணமே மனதுக்கு அமைதி தரும் வண்ணமாக எனக்கு இருந்துள்ளது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பத்தின் புன்னகையில் கூடுதல் சாந்தமும் அழகும் இருக்கும் என்பது என் எண்ணம்.

Advertisements

3 thoughts on “காற்றின் நிறம்

 1. மிக நேர்த்தியாகவும் அழகாகவும் வந்துள்ளது. சற்று தூரத்திலிருந்து பார்க்கும் போது அதன் எதார்த்தம் இன்பம் தருகிறது. அளவு குறைந்த தூரிகையில் அல்லது பேப்பரில் இவ்வளவு தெளிவு பெறச் செய்வது கடினம். இதற்காக எடுத்துக்கொண்ட பேப்பர் தன்மை, அதன் உத்தேசமான அளவு (நீள அகலம் ) என்னவாக இருக்கும்?

  • A3 எனப்படும் அளவு கொண்டது இந்த பேப்பர். தோராயமாக 11.7 X 16.5 inches.
   243 GSM அளவு கொண்ட மிகத் தடிமனான பேப்பர் இது. புத்தகங்கள் அச்சிட பயன்படுத்தப்படும் பேப்பர் 60 GSM ஆகவும், அழைப்பிதழ் அட்டைகள் அச்சிட அதிகபட்சமாக 150 GSM ஆகவும் இருக்கும். இவற்றொடு ஒப்பிட்டு இப்படம் வரைந்த பேப்பரின் தடிமனை ஊகம் செய்து கொள்ளலாம்.
   குழியும் மேடுமாக கொஞ்சம் கரடுமுரடான texture இருக்கும்.

   இத்தன்மைகள் காரணமாக, வண்ணங்கள் தாளோடு அழுத்தமாய் ஒட்டிக் கொள்ளும். ஈரப்பதத்தால் அதிகமாக வளையவும் செய்யாது. masking tape உபயோகப்படுத்தும் போது பேப்பரைக் கிழிக்காது.

   //சற்று தூரத்திலிருந்து பார்க்கும் போது அதன் எதார்த்தம் இன்பம் தருகிறது.//

   இதுவும் இம்ப்ரஸனிஸ ஓவியங்களின் பாதிப்புதான். சலித்துப் போகும் வரை இந்த இம்ப்ரஸனிஸ பாணி முழுவதையும் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என நினைத்துள்ளேன். ஒரு வகை பயிற்சிதான்.

   • ஓவியம் வரைந்து கொண்டிருக்கிற ஆர்வலர்களுக்கு மிகுந்த பயன் தரக்கூடிய நல்ல விளக்கம்.

    பெயிண்டிங்கில் வண்ணக் கலவை எப்படி மிக முக்கியமோ அதொற்கொப்பவே, தேர்வு செய்யும் வரையும் பொருளும். சில நேரங்களில் தடிமன் குறைந்த தாளில் வரைந்து, வண்ணம் காய்ந்த பின் பார்த்தல் பொறித்தெடுத்த அப்பளம் போல வளைந்து நெளிந்து இருக்கும். இதைப் படிப்பவர்கள் அந்த சிரமத்தை அனுபவிக்க மாட்டார்கள்.

    கற்றல் என்பதே நாம் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதே. இப்போதைக்கு இம்ப்ரஸனிஸம். தொடர்ந்து இத்தளத்தைப் பின்பற்றி வருகிறவர்களும், இத்தளத்தாரோடு ஓவியத்தின் ஒவ்வொரு பாணியையும் அறிந்து வருகிறார்கள் என்பதில் ஐயமில்லை.

    வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s