சிங்க வேட்டையாடும் நாய்கள்

Acrylic on Paper

Acrylic on Paper

வெறி தலைக்கேறிய நாய்க் கூட்டம் அது. பகல் முழுக்க பசியை அடக்கிக் கொண்டு சாக்கடைச் சகதியில் முழுகித் திழைக்கும். பகலில் இந்தச் சகதியால் ஒவ்வொன்றும் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொள்ளும். இரவில் ஆளரவம் அடங்கிய பின் மெல்ல ஒவ்வொன்றாய் சாக்கடை விட்டு வெளியே குதித்தெழும். சாக்கடையில் தோய்ந்த நாய்களின் கால்கள் பதித்த தடங்கள், இரவின் இருட்டில் சத்தமின்றி மறைந்து கொள்ளும். சில குருட்டு நாய்கள் மற்ற நாய்களின் வாசனையை காற்றில் தேடித் தடவி பின்தொடரும்.

ஒவ்வொரு இரவும் விதவிதமான இரைகளை வேட்டையாடி, ரத்தம் காயும் முன் தின்று தீர்த்து விடுவதே அந்த வெறி நாய்க் கூட்டத்தின் வழக்கம். இரவில் இரையின் ரத்தத்தால் ஒவ்வொன்றும் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொள்ளும். இரை கிடைக்காத நாளில் ஒவ்வொன்றும் அதனதன் அழுகிய உடலை கடித்தும், புண்களின் ரத்தத்தை குடித்தும் பசியாற்றிக் கொள்ளும்.

அன்று இரவும் அந்த வெறி நாய்க் கூட்டத்தின் வேட்டை தொடங்கியது.

மாபெரும் கவிஞன் ஒருவனின் வீட்டிற்குள் பின் வாசல் வழியே நுழைந்தது ஒரு நாய். அவனது வார்த்தைகள் கொஞ்சத்தை வாயில் கவ்விக் கொண்டு வீதியின் இருட்டுக்குள் வந்தது. மொத்த வெறி நாய்க் கூட்டமும் அங்கு கூடி அந்த வார்த்தைகளை பிய்த்துக் குதறியது. சிதைந்த வார்த்தைகளிலிருந்து கொட்டும் ரத்தத்தை ருசித்துக் குடித்து விட்டு அதனதன் இருண்ட உலகத்திற்குள் சென்று அந்த நாய்கள் பதுங்கிக்கொண்டன.

நம் காலத்தின் மகத்தான கவிஞனது வார்த்தைகள் என்பதை அறியவில்லை அந்த நாய்கள். மரணத்தை விட கசப்பான வலியை எதிர்கொள்வதைத் தவிர அவைகளுக்கு இனி வேறு வலியில்லை.

Advertisements

2 thoughts on “சிங்க வேட்டையாடும் நாய்கள்

 1. இதிலுள்ள பெயிண்டிங்கை வரைந்தது பற்றி கொஞ்சம் சொல்லலாமே.

  • இதில் நான் சொல்ல வந்த விஷயத்தை முக்கியமென நினைத்ததால் ஓவியம் பற்றிய தகவல்களைத் தவிர்த்து விட்டேன். ஆனால் ஓவியம் பற்றிய தகவல்கள் நிறையவே இருக்கின்றன. நல்ல ஓவிய ரசனை உள்ள நண்பர்கள் பலரும் இந்த ஓவியம் பற்றி குறிப்பாகக் கேட்டனர்.
   1. வண்ணத் தேர்வும் பயன்படுத்திய முறையும் stained glass ஓவிய முறையிலானது. வண்ணங்களின் கலப்பில்லாமல் அடிப்படை வண்ணங்களை அப்படியே பயன்படுத்துவது, பிரகாசமான வண்ணங்களை பயன்படுத்துவது, அழுத்தமான கருப்பு வண்ணம் கொண்டு outline கொடுப்பது போன்ற உத்திகள் stained glass தன்மையைக் கொடுத்துவிடும். பாரீஸில் பார்த்த சில இம்ப்ரஸனிஸ ஓவியங்கள் ஏற்படுத்திய தாக்கமும் இந்த stained glass முறையை தேர்ந்தெடுக்கக் காரணம்.
   2. வண்ண ஊடகம்: சிறு வயதிலிருந்தே அக்ரிலிக் வண்ணத்தை அவ்வப்போது உபயோகித்ததுண்டு. ஆனால் தற்சமயம்தான் இந்த வண்ணத்தின் பல சாதகமான அம்சங்களை உணர முடிந்தது. ஓவிய உலகின் நவீன ஊடகமாக அக்ரிலிக் வண்ணம் பார்க்கப்படுகிறது. இதைப் பற்றி விரிவாக ஒரு சமயம் எழுதுகிறேன்.

   பல உத்திகளையும் முயற்சி செய்து பார்த்து எனக்கு வசதியான முறைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த அக்ரிலிக் வண்ணம் எனக்கான ஊடகமாகத் தோன்றியது. உண்மையைச் சொன்னால், இப்போதுதான் ஓவியத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s