கலைக்கு உண்மையான கலைஞனை மதிப்போம்

© Ranjit

© Ranjit

ஊரெல்லாம் சுத்தி பேரெடுத்த கூத்துக் கலைஞன் அவன்.

கூத்து ஆடுறதுல அவன அடிச்சுக்க ஆளில்ல.

அவன் கெட்ட காலம், அந்த ஊர்ல அண்ணைக்கு எக்குத்தப்பா மாட்டிக்கிட்டான்.

ஊரா அது!

அந்த ஊரு அவன் கூத்தப் பாக்க தயாராச்சு.

கூத்து ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஒருத்தன் சொன்னான்.

“இவன்லாம் என்னத்த கூத்தாடுவான்”

எதையும் கண்டுக்காம மொறயோட அவன் கூத்த ஆரம்பிச்சான்.

சாயங்காலம் ஆரம்பிச்ச கூத்து அது.

ராத்திரி ஆனது…

சுத்தி சுழண்டு கதைய நடிச்சுக் காம்பிச்சான்.
கால்வாசி ஊரு அருமை தெரியாம தூங்குச்சு.

நடு ராத்திரி ஆனது…

வேர்க்க விறுவிறுக்க கதைய நடிச்சான்.
அரைவாசி ஊரு பெருமை தெரியாம தூங்குச்சு.

சாமம் கடந்தது…

அலுப்பு காட்டிக்காம ஆடி வந்தான்.
முழு ஊரும் சத்தமில்லாமப் போச்சு

விடிஞ்சது.

தூங்குன ஊரு முழிச்சது.
அவன் ஆட்டம் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்தது.

மூச்சு வாங்க கூலிக்கு கை கெட்டி நின்னான் – ஊர் முன்னாடி

அவனவன் குறை சொன்னான்.

கூத்துல எங்க ஊர்ப் பெருமை இல்லன்னான் ஒருத்தன்.
எங்க குலப் பெருமை இல்லன்னான் ஒருத்தன்.
ஒன்னும் வெளங்கலன்னான் ஒருத்தன்.

‘எல்லாம் இருந்துச்சு. நீங்கதான் தூங்கிப் போனீங்க’ன்னு வாதாடிப் பாத்தான் நம்ம கூத்துக் கலைஞன்.

அவன ஊரே சேர்ந்து அடிச்சு வெரட்டீருச்சு. எங்கயும் இனி உன் கூத்து நடக்க விடமாட்டோம்னு வரிஞ்சு கட்டுனாங்க.

ஒரு செவிடன் ஓடி வந்தான். கூத்துக் கலைஞன பாத்து சொன்னான்:

“காது வெளங்காத எனக்கு உன் கூத்தும் வெளங்கல”
“நீ ஆடுன கூத்து நல்லதா கெட்டதான்னும் எனக்குத் தெரியாது”
“ஆனா.. சாயந்தரம் ஆரம்பிச்சு ஒரு வா தண்ணி கூட குடிக்காம வைராக்கியத்தோட அயத்துப் போகாம விடியக் காலம் வரைக்கு நீ ஆடீருக்க”
“உன்னோட அந்த வெறித்தனமான உழைப்ப பாத்து மலைச்சுப் போனேன். இந்தா வச்சுக்கோ”

முடிஞ்சு வச்சிருந்த கொஞ்சம் பணத்தையும், பானை அரிசியையும் கொடுத்தான் செவிடன்.

Advertisements

4 thoughts on “கலைக்கு உண்மையான கலைஞனை மதிப்போம்

  1. விஸ்வரூபம் பிரச்சனைக்கும், கமலுக்கும் மிகக் கச்சிதமாக பொருந்துகிறது போல எனக்கு ஒரு கற்பனை தோன்றுகிறது

  2. கமல் சொல்ல வர்றதுதான் சில பேருக்கு புரியாது, ஆனா கமல பத்தி சொன்னா எல்லோருக்கும் புரியும் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s