வாடிவாசல்

© Ranjit

© Ranjit

© Ranjit

© Ranjit

© Ranjit

© Ranjit

சி.சு.செல்லப்பாவின் குறுநாவல் ‘வாடிவாசல்’. ஜல்லிக்கட்டுக் களத்தில் தொடங்கி அங்கேயே முடியும் கதை.

வழக்கமாக, சிலாகித்த நாவல்கள் பற்றி நிறைய பேசத் தோன்றும். ஆனால் இந்நாவல் என்னை வரையத் தூண்டியது. மேலுள்ள மூன்று ஓவியங்களும் அதன் விளைவு.

சம்பவங்களின் மிகச் சாதாரண விவரிப்புகள்தான் மொத்த நாவலுமே. ஆனால் அது வரைந்து காண்பிக்கும் சித்திரம் ரொம்ப நுட்பமானது. சுருக்கிச் சொன்னால், மனிதன்-மனிதன், மனிதன்-மிருகம் பற்றிய கதை இது. இது காண்பிக்கும் வீர உணர்ச்சி சாயம் பூசப்பட்ட மிகை உணர்ச்சி அல்ல. ரொம்ப இயல்பானது.

பிச்சி, மருதன் உதவியுடன் காரிக் காளையை அணையும் காட்சி விவரிப்பு ரொம்பச் சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்த வருடத்தில் வரைந்த முதல் ஓவியங்கள் இவை. பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டை மற்றொரு பரிமாணத்தில் புரிந்து கொள்ள உதவிய நாவலிது. ஞாபகத்தில் நிற்கும் பொங்கல் திருநாள்.

Advertisements

10 thoughts on “வாடிவாசல்

 1. சென்னை புத்தகக் கண்காட்சி:நான் தேடிய-என்னைத் தேடிய புத்தகங்கள் « சொல் புதிது!

 2. முதல் இரு ஓவியங்களும், விதானம் இதுவரை பின்பற்றாத முறையில் வரைந்துள்ளது நன்றாக உள்ளது. இந்த முறைமைக்கு ஏதும் பின்புலம் இருப்பின் கூறினால் நன்று.

  • அவ்விரண்டு ஓவியங்களும் soft pastel என்ற medium கொண்டு வரைந்தது.

   oil painting-ற்கும் crayon-க்கும் இடைப்பட்ட ஒரு தன்மையை கொடுக்கக்கூடிய இந்த medium வழங்கும் சாத்தியங்கள் அதிகம்.

   மாடணையும் காட்சிக்கு இதை பயன்படுத்தினால் அழுத்தமான வண்ணங்களோடு வரையலாம் எனத் தோன்றியது. வெள்ளைத் தீட்டல்கள் மேலும் வலு கூட்டுமென நினைத்தேன். இம்முறையில் நிறைய படங்கள் வரைய நினைத்துள்ளேன்.

   ஏற்கனவே கீழ்கண்ட இணைப்பில் உள்ள குதிரை படம் soft pastel-ல் வரைந்ததுதான். ஆனால் இது போன்ற கிறுக்கல் பாணி அதில் இருக்காது.

   https://vidhaanam.wordpress.com/2012/08/22/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA/

 3. விளக்கத்திற்கு நன்றி. புதிய முறைமை என்பது வண்ணங்களையோ தூரிகையையோ பொறுத்ததன்று, வரைகின்ற ஓவியனைப் பொறுத்ததே என்பதைக் காட்டுகிறது.

 4. இன்று தான் ‘வாடிவாசல்’- தேடி இங்கே வந்தேன். அருமையாக வரைந்திருக்கிறீர்கள். பிச்சி காரிக்கும் முன் கிடப்பதை செல்லப்பா எப்படிச் சொல்லியிருந்தாரோ அப்படியே கொண்டு வந்திருக்கிறீர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s