அண்ணார்ந்து பார்த்தல்

நமது அன்றாடச் செயல்களில் நாம் மேல்நோக்கிப் பார்க்கும் தருணம் என்பது மிகக் குறைவு. நமது தலைக்கு மேல் உள்ள பெரும் உலகை அவ்வளவாக நாம் கவனிப்பதேயில்லை என்றே சொல்லலாம். நாம் பார்க்கும் உலகம் நம் காலடியில் ஆரம்பித்து கண் மட்டத்தில் நாம் காணும் எல்லையோடு முடிந்து விடுகிறது. நமது அத்தனை சிந்தனைகளும் இந்தச் சின்ன எல்லைக்குள்தான். கலைக்கான ஊற்றுக்கண் அத்தனையும் இந்த எல்லையைத் தாண்டிதான் கொட்டிக் கிடக்கிறதென எண்ணிக் கொள்வதுண்டு.

சுற்றியுள்ளவற்றைத் திரும்பத் திரும்ப புகைப்படம் எடுத்துச் சலித்த போது மேல் நோக்கிய கோணத்தில் நான் எடுத்த சில புகைப்படங்கள் கீழே.

ஒவ்வொரு படத்திற்கும் கீழே உள்ள தமிழ் வரிகள் பாரதியினுடையது.

முதல் படம், ஆறு மாடிக் கட்டிடத்தின் தரைத் தளத்திலிருந்து எடுத்தது. அந்தச் சுருள்கள் மாடிப் படிகள்.

இரண்டாவது படம், கப்பன் பார்க்கின் ஒரு மரத்தடியிலிருந்து எடுத்தது.

மூன்றாவது, கழுகுமலை வெட்டுவான் கோயிலின் கடவு போன்ற பாதையில் நின்று மேல்நோக்கி எடுத்தது.

நான்காவது, ஒரு சித்திரை பெளர்ணமி நாளன்று எடுத்தது.

 

படம் 1
camera: Sony Ericsson mobile camera
“வடிவத்தைக் காத்தால், சக்தியைக் காக்கலாம்
————————————————————————————
படம் 2
camera: nikon D60, FL: 26mm
“ஞாயிறே,இருளை என்ன செய்துவிட்டாய்? ஓட்டினாயா?கொன்றாயா? விழுங்கிவிட்டாயா?
ஞாயிறே! நின்னிடத்து ஒளி எங்ஙனம் நிற்கின்றது? நீ அதனை உமிழ்கின்றாயா? அது நின்னைத் தின்னுகிறதா?அன்றி, ஒளி தவிர நீ வேறோன்றுமில்லையா?”
————————————————————————————
படம் 3
camera: nikon D60, FL: 90mm
“உங்களையெல்லாம் படைத்தவள் வித்தைக்காரி.அவள் மோஹினி.மாயக்காரி.அவளைத் தொழுகின்றோம்”
————————————————————————————
படம் 4
camera: nikon D60, FL: 300mm
“பொங்கிவரும் பெருநிலவு”
————————————————————————————
Advertisements

One thought on “அண்ணார்ந்து பார்த்தல்

  1. முதலாவது , இரண்டாவது , நான்காவது புகைப்படங்கள் , நான் ஏற்கனவே பார்த்த படங்களை நினைவு படுத்துகின்றன. குறிப்பாக நிலாவை ரொம்ப அருகில் காட்டும் பல தொலைநோக்கிப் படங்களைப் பார்த்து விட்டு இனிமேல் நிலாவை என்னுடைய கண்களால் மட்டும் தான் இனி காண்பது என முடிவு செய்துள்ளேன் .

    இந்த மூன்றாவது படம் , என்னை மிகவும் கவர்ந்து விட்டது. பொருத்தமான வரிகள் . மாயஜாலம் தான் செய்கிறது இப்படம்.

    ரொம்ப Advance Model வந்து விட்டாலும் கூட Nikon D60 வைத்திருப்பவர்கள் , கல்யாணம் முடிந்த பின் பள்ளிக் கூட காதலை நினைப்பது போல பரவசத்தோடே , அந்தக் கேமராவையோ , அதில் எடுத்த படங்களையோ பற்றிச் சொல்கிறார்கள் . இங்கும் ரெண்டு மூணு பேர் உண்டு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s