காந்தி ஜெயந்தி

© Ranjit

“நான் ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி!’

வெறுமனே ‘காந்தி’ எனச் சொன்னால் என்னை வேறு சில ‘காந்திகளோடு’ குழப்பிக் கொள்வீர்கள்.

ஆம்! நான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி!

என் அன்புக்குரிய கதர் வேஷம் தரித்த தலைவர்களே!

எனக்குத் தெரியும், என் பிறந்த நாளை கொண்டாட நீங்கள் எங்கு ஓடுவீர்களென்று.

‘ராஜ் காட்’ சென்று மலர் அள்ளி வீசுவீர்கள்!

அந்த நினைவிடத்தில்தான் நான் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கண்டிப்பாக இல்லை!

அங்குதான் நான் உறங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கண்டிப்பாக இல்லை!

நான் உயிரோடு விழிப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் – இடிந்தகரையில்.

மலர்கள் தூவி என்னை மறைத்து விடத் துடிக்கும் உங்கள் சதி எனக்குத் தெரியும்.

அதனால்தான், நான் பல உடலெடுத்து உயிரோடு விழிப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் – இடிந்தகரையில்”.