என்ன கேட்டீங்க?

© Ranjit

“என்ன கேட்டீங்க? கொஞ்சம் சத்தமா கேளுங்க. எனக்கு காது கொஞ்சம் மந்தம். ஒரு கண்ணுதான் தெரியும். கொஞ்சம் இந்த பக்கம் வந்து கேளுங்க. உங்கள பாத்துக்கிட்டே பதில் சொல்றேன்”

“ஓ.. இந்த ஃபோட்டோவுல இருக்குறது யாருன்னு கேட்கிறீங்களா?”

“எங்க அப்பாதான் இவரு. இப்ப உயிரோட இல்ல”

“என்ன கேட்டீங்க? அவருக்கும் எனக்கும் சாயல் ஒத்து வரலன்னு கேட்கிறீங்களா?”

“சத்தியமா இது என் அப்பாதான். நம்புங்க ப்ளீஸ். இவருக்குதான் நான் பிறந்தேன்”

“என்ன கேட்டீங்க? எங்க அப்பாவ பத்தியா?”

“அவரு ரொம்பப் பெரிய ஆளுங்க. அவரு காலத்துல – அணு உலைக்கும், அணு சக்திக்கும் ஆதரவு கொடுத்து பிரச்சாரம் செஞ்சவரு. அதுக்காக கவர்மெண்டுக்கிட்ட அவார்டுல்லாம் வாங்கிருக்காரு”

“என்ன கேட்டீங்க? என்னோட குடும்பத்த பத்தியா?”

“பொண்டாட்டி செத்துப் போச்சுங்க. எதுக்குன்னு எல்லாம் தெரியாது. போய்ட்டா அவ்ளோதான்”

“என்ன கேட்டீங்க? புள்ள குட்டி பத்தியா?”

“ஒரு மகன் இருக்கான். அப்படியே என் சாயல்

Advertisements

4 thoughts on “என்ன கேட்டீங்க?

 1. மிகச் சிறந்த யோசிக்க வைக்கக் கூடிய பதிவு. அவசியம் பலர் படிக்க வேண்டிய பதிவு. எந்த ஒரு விஷயமும் கலை வாயிலாக வெளிப்படும் போது அதன் வீரியம் மிக அதிகமாக இருக்கிறது. அதற்கு இப்பதிவே உதாரணம். கலை கலைஞனுக்குக் கிடைத்த வரம். அதை பிற மனிதர்களின் நலனுக்கு பயன்படுத்தும் போது அக்கலை உன்னதமடைகிறது. உன்னதத்தை நோக்கி நடை போடும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • உங்கள் மேலான கருத்துக்கு மிக்க நன்றி. உங்களைப் போன்றவர்களின் பாரட்டுகள்தான் இதைப் போன்றவற்றைச் செய்வதற்கு உத்வேகம் அளிக்கிறது.

 2. ரஞ்சித் பதிவுகளில் இது முக்கியமானது.
  அணுசக்தி பயங்கரம், கடவுள் படைப்புக்களில் உள்ள சமச்சீர்த் தன்மையை கெடுத்துவிடும். இன்னும் சொல்லப் போனால், கடவுளுக்கே சவால் விடும் மனித பயங்கரம்!
  சமச்சீர்த்தன்மை என்பது ஓர் உயிரினத்தின் வலப்பகுதியைப் போல ஒத்திருக்கும் இடப் பகுதி. இது படைப்புயிர்கள் அனைத்திற்கும் பொருந்தும். இது கெட்டுப் போனால் பிறக்கும் உயிர்கள் கோணல் மாணலாகவும், நோயோடும்தான் பிறக்கும்.
  எல்லா விதமான இயற்கை வளங்களையும் சுரண்டிய மனிதன், இப்போது கடவுளின் படைப்பைச் சுரண்ட ஆரம்பித்து விட்டான். பாதிப்பு கடவுளுக்கல்ல, மனிதனுக்கே!
  இவ்வுண்மையைப் படைப்பாளிகள் மட்டும் அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
  அகிரா குரோசேவா: http://vimeo.com/22013550
  அருந்ததி ராய்: http://www.ratical.org/ratville/nukes/endOfImagine.html
  இப்போது ரஞ்சித்தின் இச்சிறு முயற்சி!

 3. அண்ணா உங்களுடைய ப்ளாக்கை தொடர்ந்து வாசித்து வருகிறேன். கலை, ஓவியம் என்று நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் எனக்கு மனப்பாடம். ஆனால் இது போன்ற மக்கள் போராட்டங்களையோ அரசியல்வாதிகளின் கொடூர முகங்களையோ நீங்கள் அதிகம் எழுதுவதில்லை என்ற வருத்தம் எனக்குள் இருந்தது. அது இந்த பதிவுகள் மூலம் சரி செய்யப்பட்டுவிட்டதாக உணர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் – மரிய தங்கராஜ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s