அட வரைங்கப்பா!

© Ranjit

தேம்ஸ் நதிக்கரையில் ஒரு பயணி அல்லது நான் 🙂

இங்கிலாந்து பயணப் பதிவுகளை வரிசையாக எழுதி முடிச்சிறலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே ஒரு ஆப்பிரிக்க யானை குறுக்க வந்திருச்சு. என்ன பண்ண?

ஒரு வருஷம் முடியப் போகுது இன்னும் முடிக்கல. கொஞ்ச நஞ்சமும் மறக்குறதுக்குள்ளே எழுதி முடிக்கணும். அப்பப்ப நடுவுல நடுவுல எழுதினா blog முழுக்க ஒரே லண்டன் புராணம் பாடுற மாதிரி தெரியும்.
ஒரே மூச்சுல எழுதி முடிக்கலானு பாக்குறேன். அடுத்து ஒரு குதிரை குறுக்க பாயப் பாத்துச்சு. புடிச்சு அடைச்சு வச்சிருக்கேன்.

நுணுக்கங்கள் இல்லாமல், வரையும் விஷயத்தின் சாரம் குறையாமல் மிக எளிய கோடுகளால் வரையும் உத்தி ரொம்பக் கஷ்டமானது. ‘minimalistic approach’ என்று சொல்வார்கள். வராத விஷயத்தை முட்டி
மோதி கற்றுக்கொள்வதில் உள்ள அனுபவம் பிரமாதமானது. அப்படி செய்த முயற்சிதான் மேலுள்ள படம்.  இதற்காகவே பெண்ட்டல் என்ற தூரிகைப் பேனாவை வாங்கினேன். மிக அருமையான உபகரணம். கி.ரா பதிவில் உள்ள படம் இந்த தூரிகைப் பேனா வைத்து வரைந்ததுதான்.

தேம்ஸின் இரு கரையையும் இணைக்கும் நிறைய பாலங்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானது. புகழ் பெற்ற லண்டன் பிரிட்ஜ் இதில் ஒன்று.
ஆனால் நான் அதிக முறை நடந்தது ‘மில்லேனியம் பிரிட்ஜ்’ என்ற பாலத்தில்தான். இந்த பாலம் என்னை கொண்டு சேர்க்கும் இடங்கள்தான் இதன் மீது பிரியம் கொள்ளச் செய்தது. செயின்ட் பால் கதீட்ரலையும் டேட்
மார்டன் காலரியையும் இணைக்கும் பாலமிது. இந்த இரண்டையும் பற்றிய தனி பதிவுகளை விரைவில் எழுதுகிறேன். எனக்கு மிகப்பிடித்த லண்டன் பட்டியலில் இரண்டாவது மூன்றாவது இடத்தில் இருக்கும் இடங்கள் இவை. முதலிடம் வேறென்னவாக இருக்கும் தேசியக் கலைக் கூடம்தான்.

மற்ற தேம்ஸ் பாலங்களை விட நவீனமானது இந்த ‘மில்லேனியம் பிரிட்ஜ்’. நல்ல நவீன வடிவமைப்பு.
பாலத்தின் இரு கரையிலும் சிறு வியாபாரிகள், சில buskers என கூட்டத்தை கவர்ந்து கொண்டிருப்பார்கள்.
இந்த buskers என்ற சொல் இங்கிலாந்தில் மட்டுமே உபயோகிக்கப் படும் சொல். தன் தனித்திறமைகளை காட்டி காசுகளைப் பெறுபவர்களுக்குப் பெயர்தான் ‘பஸ்கர்ஸ்’. நம்மூர் ரயிலில் பாடி காசு கேட்பவர்கள்
”பஸ்கர்ஸ்’தான். எதுக்கெல்லாமோ தமிழ் கலைச்சொற்களை உருவாக்க சண்டை போடுகிறவர்கள் இதற்கும் ஒரு நல்ல தமிழ் சொல்லை உருவாக்குங்கப்பா. எத்தனை நாள்தான் அவர்கள் பிச்சைக்காரர்களாகவே இருப்பது. அதுவும் சரிதான், பேரை மாத்தினா அவங்க நிலைமை மாறப் போகுதா என்ன?

அந்தத் தூரிகைப் பேனா விஷயத்திற்கு வருகிறேன். ‘லண்டன் க்ராஃபிக் சென்டர்’ என்ற கடையில்தான் அதை வாங்கினேன். காவென்ட் கார்டனில் உள்ளது இந்தக் கடை. மிகப் பெரிய இரண்டடுக்கு மாடிக் கடை. ஓவியர்களுக்கு, சிற்பிகளுக்கு தேவையான அத்தனை உபகரணங்களும் உள்ள இடம். நான் இந்தியா திரும்பும் போது கையில் ஒரு பைசா மிச்சம் இல்லாமல் போனதற்கு இந்தக் கடையும் ஒரு காரணம். என்ன செய்வது? சிற்ப உபகரணங்கள், மர வேலைப்பாடுகளை செய்ய உதவும் கருவிகள், மிகத் தரமான ‘பேஸ்டல்கள்’ என நான் வாங்கிய எந்த உபகரணமும் இந்தியாவில் கிடைக்காது. ரொம்ப நாட்களாக தூரிகைப் பேனாவை பெங்களூரில் தேடினேன். அவென்யூ ரோட்டிலுள்ள அந்த புகழ்பெற்ற ஓவிய உபகரணக் கடையில் கூட கிடைக்கவில்லை. பின் எங்கெல்லாமோ தேடி வெறுத்தே போனது. அந்த கடைக்காரர் பின் சொன்னார். ‘ஃபேபர் காஸ்ல்  மட்டும்தான் அந்தப் பேனாவை தயாரித்து வந்தது. வாங்க ஆளில்லை என்று அந்த நிறுவனமும் இந்தியாவில் அந்தத் தயாரிப்பை நிறுத்தி விட்டதாக சொன்னார்.

எங்க ஊர் கழுகுமலையிலும் கூட, என் சிறு வயதில் ‘இந்தியன் இங்க்’ வாங்க கிடைக்கும். சமீபத்தில் ஊருக்கு சென்ற போது அந்தக் கடை உரிமையாளரிடம் ‘இந்தியன் இங்க்’ கேட்க, அவர் இப்படி சொன்னார்: “கேள்வி இல்லாத சரக்கை வாங்கி வச்சு என்ன பண்றது. அதான் இப்பல்லாம் அதை வாங்கி வைக்கிறதில்லை ‘.

ஓவியத்தில் ஆர்வம உள்ளவர்கள் குறைந்து விட்டார்களா என்ன? தெரியவில்லை.

வரையிற பழக்கம் வாழ்க்கை மீதான, இயற்கை மீதான பார்வையை புதுசா மாத்தி அமைக்கும்.
முக்கியமா சின்னப் பசங்களுக்கு வரையச் சொல்லிக் கொடுக்காதீங்க. அவங்களே வரையிரதுக்கு நேரத்தை மட்டும் அவங்களுக்கு கொடுங்க. அது போதும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s