பாண்ட் ஸ்ட்ரீட் பஜனை

© Ranjit

 

லண்டன் ‘பாண்ட்’ தெருவில் பார்த்த இங்கிலாந்தைச் சேர்ந்த வெள்ளைக்கார ‘இஸ்கான்’ பக்தர்கள்.
அறைக்குச் சென்ற பின் நினைவில் கொண்டு வந்து வரைந்த படம்.

பாண்ட் தெருவில் ஆரம்பித்து ஆக்ஸ்போர்ட் தெரு வரை எக்கச்சக்கமான கடைகள்.
டிஸ்னி ஷாப், பூட்ஸ், மேக்டோனால்ட்ஸ், ப்ரைமார்க்கில் ஆரம்பித்து திருப்பூர் துணிகளை விற்கும் பல கடைகள், அவற்றை லண்டன் துணிகள் என பெருமிதத்தோடு வாங்கிச் செல்லும் இந்தியர்கள்,
‘வீடற்றவன்’ என்ற போர்டுடன் KFC வாசலில் பிச்சை கேட்கும் பிரித்தானிய பிச்சைக்காரர்கள், பல இந்திய/பாகிஸ்தானிய எலக்ட்ரானிக்ஸ் கடைகள், பிரித்தானியர்கள், ருமேனியர்கள் என எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் வீதி இது.

பொருட்களுக்கு மட்டுமல்ல, சமயங்களுக்கும் கூட்டம்தானே ஆதாரம். அதனால்தான் சில சமய பரப்பாளர்கள் இந்த வீதி கூட்டத்தை தேடி வருகிறார்கள்.
கருப்பின ஆண்கள், பெண்கள் சிலர் கத்தை நோட்டீசுகளை கையிலேந்தியபடி ‘ஏசு வரப்போகிறார்’ என முழங்கிக் கொண்டிருப்பார்கள். ‘இஸ்கான்’ பக்தர்கள் சிலர் பாடல்கள் பாடிக்கொண்டு, அவர்களின் தலைமை ஆச்சாரியாவின் புத்தகங்களை விற்றுக்கொண்டு அந்த வீதியை வலம் வருவார்கள்.

அவர்களுக்கு பொருந்தாத ஒன்றை அவர்கள் அணிந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. பாண்ட் தெருவின் பின்னணியில் ‘contrast’-ஆக தெரிந்தார்கள். வரைவதற்கு அருமையான விஷயமாய் பட்டது.

பெங்களூர் ‘இஸ்கான்’ கோயிலுக்கு, முன்பு அடிக்கடி சென்றதுண்டு. அங்குள்ள நூலகத்தை கொஞ்சம் பயன்படுத்தியுள்ளேன். அந்த இயக்கத்தின், அதன் கருத்துகளின் நிறுவனத் தன்மை ஒருவித சலிப்பை ஏற்படுத்தியது.
மிகப் பிரபலமான ஈஷா வாஸ்ய உபநிஷதத்தை அவர்களின் தலைமை ஆச்சார்யாவின் உரையில் படித்து விட்டு அலுப்புதான் ஏற்பட்டது. அதே உபநிஷதத்தின் ரஜனீஷ் உரையை பின்னர் படித்து அந்த உபநிஷதத்தின் மகத்துவத்தை புரிந்து கொண்டேன். அதன் பதினெட்டு சூத்திரங்களும் ‘abstract’ ஆன ஆன்மீக அனுபவத்தை முன்வைப்பவை. உபநிஷதங்கள் வேதங்களை முழுமை செய்பவை என்ற வழக்கமான பார்வையிலிருந்து மாறுபட்டு, வேதங்களுக்கு எதிராக புரட்சி செய்பவை என்றவர் ரஜனீஷ்.

எது எப்படியோ… உண்மை ஆன்மீகம் நம்மைத் தேடி வருவதில்லை. நாம்தான் தேடி அடைய வேண்டும்.

Advertisements

One thought on “பாண்ட் ஸ்ட்ரீட் பஜனை

  1. இஸ்கான் – இந்து மதத்தின் பெந்தேகோஸ்தே பிரிவு . மிரண்டு போயிருக்கிறேன் . எங்கள் ஆபிசில் ஒருத்தர் புராணங்களை எல்லாம் வரலாறு என்று கூற , பதிலுக்கு அவர் இஸ்கான் பிரிவைச் சேர்ந்தவர் என்பது தெரியாமல் நான் பாட்டுக்கு விளையாட்டாக ஒன்றை சொல்ல , எங்களை சுற்றி இருந்தவர்கள் கஷ்டப்பட்டு சிரிப்பையும் , அவரையும் அடக்கி உட்கார வைத்தார்கள்.
    ” ஈஸா வாஸ்யம் இதம் சர்வம் ” – என்று முதல் சுலோகமே இரண்டு முரண்களை பற்றி பேசுவதாகத் தோன்றும் . எல்லாவற்றிலும் இறை உறைகிறது : பிறர் பொருளை விரும்பாதே , எல்லாவற்றிலும் இறை இருப்பதை ஒப்புக் கொள்ளகூடியவனுக்கு ஏன் பிறர் பொருள் மேல் ஆசை தோன்றப் போகிறது ? இந்த இரண்டு முரண்கள் கற்பனைகள் கொண்டு வாசிக்கும் வாசகனுக்கு பிரமிப்பை தருபவை .
    உபநிடதம் என்ற வார்த்தைக்கே ” அருகே அமர்ந்து கேட்பது ” என்று தான் பொருள் . குரு மூலமாகப் படிப்பதே சிறந்த முறைமை. இன்று வாய்ப்பு குறைவு , அதனால் சமஸ்க்ருத வார்த்தைகளுக்கு மட்டும் பொருளை தெரிந்து கொண்டு , நானாக எந்த மதம் ( சைவம் / வைணவம் / மீமாம்சை ) சாராமலும் யோசித்துப் பார்ப்பேன் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s