மண் சிலை

நான் முதன்முதலாக செய்து பார்த்த களிமண் சிலைதான் மேலுள்ள king kong.

“முதல் முயற்சின்னு சொல்ற, எதுனா சாமி சிலைய செய்யலாம்ல?” என்று நீங்கள் சொல்வீர்களானால், உங்களுக்கு ‘சிற்பியின் நரகம்’ என்ற புதுமைப்பித்தனின் கதையை பரிந்துரைக்கிறேன்.

களிமண் சிலை செய்வதற்கான முயற்சி 10 வயதிலிருந்தே ஆரம்பித்த ஒன்று. செய்த எதுவுமே இதுவரை உருப்படியாக வந்ததில்லை. இந்த குரங்குதான் முதல் வெற்றி(அப்டினு நினைக்கிறேன்!).

குரங்கில் ஆரம்பித்த இந்த முயற்சி மனிதன் வரை வர ஒரு பெரிய பரிணாமம் நிகழ வேண்டும் – பார்க்கலாம்.

கழுகுமலை கீழ பஜாரிலுள்ள சுண்ணாம்பு காளவாசல் பக்கத்தில் அமர்ந்து மண் சிலைகள் செய்வார் ஒரு பெரியவர்.
20 வருஷத்துக்கு முன்னாலே அவரை சுற்றி அமர்ந்து வேடிக்கை பார்ப்போம். நிறைய புராணக் கதைகள் சொல்வார். கடவுள்கள் அவர் கை வழியாக மண்ணுக்குள் இறங்குவார்கள்.
அவரது எந்தச் சிலையும் கதையின்றி இருந்ததில்லை. நாயொன்று செய்தார். அதற்கும் ஒரு கதை வைத்திருந்தார்.

5 ரூபாய் சேர்த்து வைத்து அவரிடம் ஒரு பெண் தெய்வச்சிலையை – யாரென்று ஞாபகமில்லை – வாங்கினேன். ஒரு ஆர்வத்தில் வாங்கி விட்டேன்.
பிறகுதான் பயம் வந்தது. எங்களுடையது கிறித்தவக் குடும்பம். ‘வீட்ல தெரிஞ்சா செத்தேன்’னு தோணுச்சு. எங்க வீட்டு காலி இடத்துல குழி தோண்டி புதைச்சு வச்சேன்.
அதுக்கப்புறம் அது மறந்தே போனது. அந்த சிலை என்னாயிருக்கும்னு தெரியல.

‘கி.முத்து’ னு ஒரு ஓவியர். அவரும் திறமையான சிற்பிதான். ஆனாலும் அந்த சுண்ணாம்பு காளவாசல் பெரிசுதான் பெரிசா மனசுல நிக்கிறார். அவர் இன்னும் அங்கு இருப்பாரான்னு தெரியல. இந்த குரங்கை அவர் ஒருவேளை பார்த்தால்,  இதுக்கும் ஒரு கதை சொல்லியிருப்பாரு.

இந்த மாதிரியான பெரிசுகளின் காலம் இனிமே கிடையாதுன்னு நினைக்கும் போதே, ஒருவித பயம் வருது.

Advertisements

3 thoughts on “மண் சிலை

 1. ஸ்கூல் படிக்கும் போது , கருப்பசாமி சார் வகுப்பில் அவர் செய்து காட்டிய சோதனை ஒன்று அச்சு அசலாக 100 % , புத்தகத்தில் சொன்ன ரிசல்ட்டை காட்டியது .

  பெருமிதமாக எங்களைப் பார்த்து ” எப்படி ? ” என்றார் .

  ” பயங்கரம் சார் ” – என்றோம் .

  மனிதர் குழம்பி விட்டார் . பாராட்டுறாங்களா ? இல்ல ஓட்டுரான்களா என்று சந்தேகத்துடன் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார் .

  இந்த குரங்கையும் ” பயங்கரம் ” என்றே சொல்லத் தோன்றுகிறது . பாராட்டாகத்தான் .

  அசின் சார் இப்போது நமது ஊர் பிரபலங்களை ஆவணப் படுத்துகின்ற முயற்சியில் உள்ளார் . கி.முத்து அவர்களும் அந்த லிஸ்ட்டில் இருக்கிறார்.

 2. சிலை என்றாலும் ..இந்த குரங்கும் ரஞ்சித் தீட்டிய ஓவியமோ என ஒரு கனம் ஆராய வைக்கிறது. உணர்வுப் பூர்வமான படைப்பிற்கு அது சார்ந்த பெயர் முக்கியமில்லை. படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s