மவுஸில் ஈ.வே.ரா

© Ranjit

 

ஸ்கெட்ச் செய்வதற்கு ஈ.வே.ரா – வை விட அற்புதமான முகம் வேறில்லை.

அதற்கு ஒரே காரணம்தான்.வரைவது ரொம்பச் சுலபம்.

முகத்தின் 75% தாடியை வரைந்தால் முடிந்தது ஈ.வே.ரா portrait.

ஓவியம் பழக ஆரம்பித்த சிறு வயதில் யாரை வரைந்தாலும் அந்த படத்தின் கீழே அந்த நபரின் பெயரை எழுதுவது வழக்கம். இல்லையென்றால் அந்த நபரை கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டம்.

ஹிட்லரை வரைந்தால் சார்லி சாப்ளின் வந்து நிற்பார். பிறகென்ன செய்வது, ‘த கிரேட் டிக்டேட்டரில் வரும் சார்லி சாப்ளின்’ என படத்திற்கு கீழே எழுத வேண்டியதுதான்!!

இந்த தொல்லைகள் எதுவும் ஈ.வே.ரா. அவர்களை வரையும் போது வருவதில்லை.

மேலுள்ள ஸ்கெட்ச் மவுஸ் உதவியில் கணினியில் வரைந்தது.

‘Harmony’ என்ற tool-ல் வரைந்தது. chrome web store-ல் கிடைத்த அற்புதமான tool.

இதற்கு முன் பல sketching software பயன்படுத்தியுள்ளேன். இதுதான் ‘the best’. அப்படியொன்றும் அதிகமான options கிடையாதுதான். ஆனால் வரையும் கோடுகள் blend – ஆகும் முறையை அருமையாக ‘program’ செய்துள்ளார்கள்.

வரையத் தெரியாதவர்கள் கூட மிக அழகாக இதில் வரைய முடியும்.

அட! ஒண்ணுமே தெரியலைனா என்ன? சும்மா நாலு கலரை தேச்சா போதும் அற்புதமான ‘Abstract art’ ரெடி!