காதலர் கூடம்

© Ranjit

இது பெங்களூர்ல உள்ள library – சேஷாத்ரி ஐயர் மெமோரியல் ஹால் – கப்பன் பார்க்கில் உள்ளது.

கப்பன் பார்க் என்ற உடனே, காதலர்கள் மொய்க்கும் வனம்தான் எல்லோருக்கும் ஞாபகத்தில் வரும்.
இந்த building உள்ளே இருப்பவர்களும் ஒரு வகையில் காதலர்கள்தான். என்ன ஒரே வித்யாசம் என்றால், இவர்கள் மடியில் கிடப்பது புத்தகம்.

இங்கு, யாரும் புத்தகங்களை எடுத்து படித்து விடுவார்களோ என பயந்து பெரும்பாலான புத்தகங்களை எட்டாத, மிக உயர்ந்த அடுக்குகளிலேதான் வைத்திருப்பார்கள். ஒரே ஒரு ஏணி இருக்கும். அதையும் பணியாளர் அனுமதி/உதவியுடன் எடுத்து பயன்படுத்துவதற்குள், மொத்த நூலகக் கண்களும் நம் மீதே இருக்கும். இந்த தர்மசங்கடமான நிலையை தவிர்க்கவே, யாரும் மேல்தட்டு புத்தகங்களை விரும்புவதில்லை.(இதுதான் மேல்தட்டு மனநிலையோ?!)

ஒரு முறை, வரலாற்று புத்தக பகுதியின் கீழ் அடுக்குகளை தேடி விட்டு, பிடித்த மாதிரி எதுவும் கிடைக்காமல், மேல் அடுக்கை தேட நினைத்தேன். பணியாளரை ஏணிக்காக அழைக்க, ‘மேல என்ன புதையலா இருக்குது? இதே பழைய புத்தகந்தான் இருக்கும்.'(கன்னடத்தில்) என முணுமுணுத்துக் கொண்டே உதவினார்.

ஏறிச்சென்று கையில் எடுத்த புத்தகம் கோஹிநூர் வைரம் பற்றிய அருமையான வரலாற்றுப் புத்தகம்.

சுந்தர ராமசாமி அவர்கள் சொன்னதாக ஜெயமோகன் தன் தளத்தில் குறிப்பிட்ட விஷயம் அற்புதமான ஓன்று:

‘புத்தகங்களை நாம் தேடும் போது, புத்தகங்களும் நம்மை தேட ஆரம்பிக்கும்.’

Advertisements

One thought on “காதலர் கூடம்

  1. ‘புத்தகங்களை நாம் தேடும் போது, புத்தகங்களும் நம்மை தேட ஆரம்பிக்கும்.’
    அருமையான வரிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். பதிவுகளும், படங்களும் அருமையாக உள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s