புரிந்தவன் ஆட புவனங்கள் ஆடும்

shiva_koothu

© Ranjit

 

திருமந்திரத்தின் ஒன்பதாவது தந்திரத்தில் பேசப்படும் பல விஷயங்களில் முக்கியமானது திருக்கூத்து தரிசனம். சிவனின் ஐவகை நடனங்களையும் சிலாகித்துச் சொல்லும் 82 பாடல்கள் அடங்கிய பகுதியிது.

கீழுள்ள பாடல் மிகப் பெரிய காட்சியொன்றை சிவக் கூத்தின் அனுபவத்தோடு என் மனதுக்குள் விரித்துக் காட்டியது.

ஆதிபரன்ஆட அங்கைக் கனலாட
ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப்
பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.  2751 -திருமந்திரம், ஒன்பதாந் தந்திரம் – பொற்றில்லைக் கூத்து.

சிவன் தன் கையிலேந்திய நெருப்பாட, தன் தலையின் சடைப்பின்னலாட, ஒரு வகை மயக்க நிலையிலாடுகிறான். தலையில் குடிகொண்டுள்ள பிறை நிலா ஆட, இப்பேரண்டத்தின் மீது, நாதத்தோடு நடனம் புரிகிறான்.

இதைப் படித்த உடன் உருவான மனச்சித்திரத்தை, மேசையின் மேலிருந்த சில Reynolds refills – கொண்டு வரைந்தேன். நான்கு ஆண்டுகளுக்கு முன் வரைந்த இந்தப் படத்தை, தற்செயலாக என் கணினியில் உள்ளவற்றை backup செய்யும் போது பார்க்க நேர்ந்தது. இதன் hard copy என் வசம் இப்போது இல்லை. இந்தியர்களுக்கு கலையின் மீது இருக்கும் ஆர்வம், அதை பாதுகாப்பதில் இருப்பதில்லை. எனக்கும் அந்த பாரம்பரிய ரத்தம்தானே ஓடுகிறது.

இந்த ஓவியத்தில் platonic solids என அழைக்கப்படும் ஐந்து வடிவங்களுள், மூன்று வடிவ கணித உருவங்களை பயன்படுத்தியுள்ளேன்:
1. Tetrahedron (முதல் வலது கையில் உள்ள பிரமிடு வடிவம்)
2. Dodecahedron (சிவன் காலூன்றி நிற்கும் வடிவம்)
3. Cube/hexahedron (பாம்பு சுற்றியுள்ள கனசதுரம்)

ப்ளேட்டோ, முதல் வடிவத்தை நெருப்புக்கும், இரண்டாவதை பிரபஞ்சத்தை குறிக்கவும், மூன்றாவதை பூமிக்கு குறியீடாகவும் சொல்கிறார். வடிவ கணிதவியலில் அப்போது எனக்கிருந்த ஆர்வத்தால் இந்த மூன்று platonic solids – ஐ சிவக் கூத்தின் குறியீடுகளாக இந்த ஓவியத்தில் புகுத்திப் பார்த்தேன்.

இது போன்ற ஓவியங்களைச் செய்யும் போதும் உன்மத்த நிலையை அடைய முடியுமென உணர்ந்தேன்.

Advertisements

3 thoughts on “புரிந்தவன் ஆட புவனங்கள் ஆடும்

 1. காற்றில் வாழ்வைப் போல்
  வினோத நடனங்கள் புரியும்
  இலைகளைப் பார்த்திருக்கிறேன்.
  ஒவ்வொரு முறையும்
  இலையைப் பிடிக்கும்போது
  நடனம் மட்டும் எங்கோ
  ஒளிந்து கொள்கிறது

  -தேவதச்சன்

  இந்த கவிதையை , ” வாழ்வை அறிந்துகொள்ள , அதன் புறக்காரணிகளை பிடிக்கும்போது , வாழ்க்கை நழுவி விடுகிறது ” என்பது போல புரிந்து கொள்கிறேன் . எந்த தரிசனத்தையும் புறவயமாக மட்டும் அறிந்து அதனை தரிசிக்க முடியாது. அது நழுவிச்சென்று விடும். ஆனாலும் நமது மானுட முயற்சி தளர்வதில்லை .

  நடராஜ தத்துவத்தை உலகம் அவதானித்துக்கொண்டு தான் வருகிறது. ” Angels and Demons அல்லது Davinci Code ” படத்தில் கூட லாங்க்டனின் அறையில் நடராஜர் ஓவியம் கொண்ட புத்தகம் இருக்கும். சிறு வயதில் கதைகளை அப்படியே நம்பி சிவனின் இருபத்தி ஐந்து மாகேஸ்வர மூர்த்தங்களில் ஒன்றாக மட்டுமே நடராஜரை அறிந்திருந்தேன்.

  மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கும் போது மெட்டலர்ஜி எடுத்த பிரசன்ன வெங்கடேசன் சார் நமது பாரம்பரிய உலோகவியல் அறிவைப்பற்றி பேசும் போது நடராஜரின் ஒவ்வொரு அங்கமும் ஆடுவதையும் அதை உலோகத்தில் வடித்த சிற்பியின் திறனையும் வியந்தார்.

  பிரபஞ்சமே நிலையாக இல்லாமல் ஆடிக்கொண்டு தான் இருக்கிறது , ஒரு அணு கூட அசையாமல் இல்லை என்பதை தரிசித்த நமது முன்னோர்களில் எவரோ , அவர் பெற்ற தரிசனத்தை பௌதீகமாக நடராஜர் உருவத்தின் மூலம் அமைத்திருக்கக்கூடும் .

  அந்த வகையில் நமது ரஞ்சித்தின் இந்த ஓவியத்தை மானுட ஞானத்தை , தரிசனங்களின் மீது போட்டுப்பார்ப்பதின் நீட்சியாகவே காண்கிறேன் . குறிப்பாக கன சதுரத்தைச்சுற்றிய பாம்பின் தலைக்கு மேல் பறக்கும் தட்டான் பூச்சியை பார்க்கும் போதே , அசைவு தான் நினைவுக்கு வருகிறது இல்லையா ? .

 2. ஓராண்டு நிறைவு! « விதானம் ─╌┈

 3. விரிசடை உரகாபரணன் – ..விதானம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s