கல், கலை, கதை

YakshiAmbika

© Ranjit

 

முன்னோர்க்கென படைத்த உணவை பூசைக்கு முன்பே சமண முனிக்கு யாசகமாக கொடுத்துவிடுகிறாள் அம்பிகா. கணவனின் கோபத்திற்கு பயந்து தற்கொலை செய்கிறாள்.

சமணத் துறவிக்காற்றிய தொண்டினை மெச்சி , மேலுலகத்தில் ‘யக்ஷி’* என்ற தெய்வ நிலையை அடைகிறாள் அம்பிகா தேவி. தீர்த்தங்கரர்களுக்கு பணிசெய்வது யக்ஷிகளின் வேலை.  ‘யக்ஷி’  அம்பிகாவிற்கு allot செய்யப்பட்டவர் 22 ஆம் தீர்த்தங்கரரான நேமினாதர்.

கணவனை பிரிந்த துயரால் வாடும் நம் யக்ஷி, இந்திரனை வேண்ட, அவனும் வரமளிக்கிறான் இப்படி: ‘ பூலோகம் திரும்பி, ஒரே நேரத்தில், யக்ஷியாகவும் உன் கணவனுக்கு மனைவியாகவும் வாழ்ந்து மகிழ்வாயாக ‘.

நல்ல வரம்தான். ஆனால் கணவனுக்கு இவளின் dual personality-யால் நடத்தையில் வித்தியாசம் தெரிய, பிரச்சினையாகிறது. தன் கணவனின் சஞ்சலம் போக்க தன் யக்ஷி வடிவை காட்டி அவனை திக்குமுக்காடச் செய்கிறாள்.

தன் குழந்தைகள் சகிதம் கணவனுக்கு அருள் பாலிக்கும் காட்சியே மேலுள்ளது. கழுகுமலை சமணச் சிற்பத் தொகுப்பில் இந்த கதை சொல்லும் புடைப்புச் சிற்பத்தை(narrative bas relief) காணலாம்.

வரையும் போது, இதன் நளினம் முழுவதையும் கொண்டு வர முடியவில்லை எனினும் அதன் நுணுக்கங்களை ரசிக்க வாய்ப்பு கிடைத்ததாக எண்ணிக கொண்டேன்.

அநேகமாக தென்னகத்தின் அனைத்து முக்கிய சமணத் தலங்களிலும் இந்தக் கதை வடிக்கப்பட்டிருந்தாலும், கழுகுமலையில் உள்ள இந்தச் சிற்பமே masterpiece- ஆக கருதப்படுகிறது.

அம்பிகாவின் அருள் பாலிக்கும் பிரகாசத்தை சிற்பத்தில் காட்டவே, கணவனின் உருவம் ஒழுங்கற்றதாய்(distorted) செதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதுண்டு. எனக்கென்னவோ, சிற்ப வேலை முடிவு பெறாமையின் அடையாளமாகவே அது தோன்றுகிறது. கொஞ்சம் கவனித்துப் பார்க்கும்போது இது புலப்படும்.

கழுகுமலை ஓவியங்கள் பற்றி சொல்புதிது தளத்தில் நான் எழுதிய பதிவு.

* ‘இசக்கி’ வழிபாடு, சமண  ‘யக்ஷி’யின் நாட்டார் வடிவமாகக் கருதப்படுவதுண்டு.