நிழல் சுகம் காணும் நாய்கள்

Street Dog

© Ranjit, charcoal on Paper

பெங்களூரில், எங்கள் தெருவில் சுற்றித் திரியும் தெரு நாயிது.

எது தெரு நாய் என்று அழைக்கப்பட தகுதியுள்ள நாய்? வாக்கிங்(காலைக் கடனுக்கு) அழைத்துச் செல்ல தனக்கென ஒரு எஜமானனும், ஒரு இடமும், ஒரு சோற்றுக் கிண்ணமும் இல்லாதது; கடவுகளில், புதர்களில் கணக்கின்றி குட்டிகளை பிரசவிப்பது; சுவரோர நிழலில் சுகமாய் தூங்குவது; குடல் சிதறி தார் சாலையில் ஜீவனிழந்து கிடப்பது; இவையெல்லாம் தெரு நாயின் சில லட்சணங்கள்.

இந்த நாயும், இந்த category-ல் வரும் நாய்தான். மற்ற தெரு நாய்களை விட வயதில் மூத்த மிகச் சாதுவான நாயிது. எல்லாக் கடமையிலிருந்தும் விடுபட்டு, சாவுக்கு காத்திருக்கும் பெரிசுகள் மௌனமாய் நடமாடித் திரியும் மனநிலையை, இந்த நாயிடம் காண முடியும். இந்த நாய்க்கு வேலை எதுவும் இல்லாவிட்டால்(!!), தூங்குவதற்கு எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு வந்து விடும். syntax tank-ற்கும், சுவருக்கும் உள்ள இடைவெளியில், tank-ல் உள்ள தண்ணீரின் குளுமையை ரசித்தபடியே ரம்மியமாகத் தூங்கும். அருகில் யாராவது வந்தால், ஒற்றை கண்ணை லேசாகத் திறந்து பார்த்துவிட்டு மூடிக் கொள்ளும்.

தெருவில் சுற்றித் திரியும் போது, சண்டையிட்டுக் கொள்ளும் மற்ற நாய்கள் இந்த நாயை தொந்திரவு செய்வதில்லை. இதுவும் அதுகளை கண்டுகொள்வதில்லை – அன்றாட வாழ்விலிருந்து முழுமையான விடுபடல்.

“என்னத்தைச் சாதிக்க இவ்வளவு குரைத்தல்கள், இவ்வளவு சண்டைகள். செத்தால் குப்பை மேட்டிலோ, சாக்கடையிலோ தூக்கி வீசப் போகிறார்கள். அற்ப நாய்களே !” என்று அந்த நாய் மனதில் நினைத்துக் கொள்வதாய் எனக்குத் தோன்றும்.

எனக்குப் பிடித்த ‘நாய்’ என்ற ஞானக்கூத்தனின் கவிதையில் ஒரு வரி இது:

‘……

சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்

கடைசி நாயை மறித்துக்

காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?’

மனித சமூகத்தையே திட்டி உமிழ்ந்து தள்ளும் charles bukowski-ன் ‘white dog’ என்ற கவிதையில், ஒரு நாயின் மேல் அவர் கொள்ளும் மெல்லிய கருணையில், உண்மையான மகாகவிஞனின் ஆத்மாவை தரிசிக்க முடியும்.

இந்தத் தெரு நாய்களோடு ஒப்பிடும் போது வளர்ப்பு நாய்களின் பாடுதான் பரிதாபமானது.

கி. ராஜநாராயணன் இப்படிச் சொல்கிறார்: “நாய்களின் வாழ்க்கையில் இப்படி இந்த மனுசப்பயல் ‘பூந்து’ விளையாடுவது நல்லா இல்லைதான்; என்ன செய்ய. மனுசனுக்கு இதெல்லாம் வேண்டியதிருக்கிறது”.

Advertisements

One thought on “நிழல் சுகம் காணும் நாய்கள்

  1. ரஞ்சித், இது வரை நான் ஓவியங்களை கூர்ந்து ரசித்ததில்லை. அதற்கு காரணம் பொறுமையும் ஓவியத்தின் பின்னணியை விரிவாக கற்பனை செய்யும் திறனும் இல்லாததே. ஆனால் இப்போது எனக்கு ரசிக்க வாய்க்கிறது . சங்கீதம் போல , இலக்கியம் போல நிறைய பயிற்சி ஓவியத்தை ரசிக்கவும் வேண்டும். குறிப்பாக இந்த நாயின் படம் என்னை அசைய விடாமல் பார்க்க வைத்தது. வாழ்த்துக்கள் – சட்டநாதன் , கழுகுமலை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s